மாதம் ரூ.6 ஆயிரம் .. வேளாண் சட்டங்கள் ரத்து உள்பட 9 விஷயங்களை செய்யுங்க.. மோடிக்கு கடிதம் எழுதிய எதிர்க்கட்சிகள்

மாதம் ரூ.6 ஆயிரம் .. வேளாண் சட்டங்கள் ரத்து உள்பட 9 விஷயங்களை செய்யுங்க.. மோடிக்கு கடிதம் எழுதிய எதிர்க்கட்சிகள்

வேலையில்லாதோருக்கு ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்பட 9 பரிந்துரைகளை நிறைவேற்றக் கோரி பிரதமர் மோடிக்கு நாட்டின் முக்கிய 12 எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளன.

கொரோனா வைரஸின் கொடூரமான இரண்டாவது அலை நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன, நூற்றுக்கணக்கானோர் இறந்தனர் இதனால் பிரதமர் தங்களது பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு நாட்டின் முக்கிய 12 எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.

மாதம் ரூ.6 ஆயிரம் .. வேளாண் சட்டங்கள் ரத்து உள்பட 9 விஷயங்களை செய்யுங்க.. மோடிக்கு கடிதம் எழுதிய எதிர்க்கட்சிகள்
ரொக்கம்

அந்த கடிதத்தில், மத்திய அரசு மேற்கொள்வதற்கும்,நடைமுறைப்படுத்துவதற்கும் முற்றிலும் அவசியமான பல்வேறு நடவடிக்கைகள் குறித்து தனியாகவும், கூட்டாகவும் கடந்த காலங்களில் மீண்டும் மீண்டும் உங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக உங்கள் அரசாங்கம எங்களது பரிந்துரைகள் அனைத்தையும் புறக்கணித்து விட்டது அல்லது மறுத்து விட்டது. இது, இத்தகைய ஒரு பேரழிவு மனித துயரத்தை அடைய நிலைமையை தீவிரப்படுத்தியது. இதனால் எங்களது பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மாதம் ரூ.6 ஆயிரம் .. வேளாண் சட்டங்கள் ரத்து உள்பட 9 விஷயங்களை செய்யுங்க.. மோடிக்கு கடிதம் எழுதிய எதிர்க்கட்சிகள்
கோவிட தடுப்பூசிகள்

எதிர்க்கட்சிகளின் முக்கியமான 9 பரிந்துரைகள்
தடுப்பூசிக்கு மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.35 ஆயிரம் கோடியை செலவிடுங்க.
உள்நாட்டில் தடுப்பூசி உற்பத்தியை விரிவுப்படுத்த கட்டாய உரிமம் வழங்க வேண்டும்.
சர்வதேச மற்றும் உள்நாடு உள்பட வாய்ப்புள்ள அனைத்து மூலங்களிலிருந்தும் தடுப்பூசியை கொள்முதல் செய்ய வேண்டும்.
உடனடியாக இலவச, உலகளாவிய வெகுஜன தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சியை மேற்கொள்ள வேண்டும்.

மாதம் ரூ.6 ஆயிரம் .. வேளாண் சட்டங்கள் ரத்து உள்பட 9 விஷயங்களை செய்யுங்க.. மோடிக்கு கடிதம் எழுதிய எதிர்க்கட்சிகள்
புதிய நாடாளுமன்ற டிசைன்

சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணியை நிறுத்துங்க. ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகள் வாங்க அந்த பணத்தை பயன்படுத்துங்க.
வேலையில்லாதோருக்கு மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும்.
தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்க வேண்டும்.
விவசாயிகள் கோவிட்டுக்கு பலியாகுவதை தடுக்க வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.
தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்களை வாங்க பி.எம். கேர்ஸ் மற்றும் கணக்கில்காட்டப்படாத தனியார் அறக்கட்டளை நிதியத்தில் வைத்திருக்கும் அனைத்து பணத்தையும் விடுவிக்க வேண்டும்.