“தமிழ்நாட்டில் முட்டாள்கள் அதிகமாகி விட்டனர்” – ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சு!

 

“தமிழ்நாட்டில் முட்டாள்கள் அதிகமாகி விட்டனர்” –  ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சு!

வேளாண் சட்டங்கள் தொடர்பாக பொய்ப்பிரச்சாரங்களில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இதற்கான பணிகளை இரு கட்சிகளும் தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக பாஜக வேளாண் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது.

“தமிழ்நாட்டில் முட்டாள்கள் அதிகமாகி விட்டனர்” –  ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சு!

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் ஹெச். ராஜா, “CAA சட்டம் வந்தால் முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு அனுப்புவார்கள் என்று கூறினர். CAA சட்டம் கொண்டு வந்து 15 மாதங்கள் ஆகிறது, இதுவரையில் எந்த முஸ்லீமையாவது நாட்டை விட்டு அனுப்பி உள்ளதா மத்திய அரசு?; CAA சட்டம் பற்றி எதிர்க்கட்சிகள் பொய்ப்பிரச்சாரம் செய்தன. வேளாண் சட்டங்கள் தொடர்பாக பொய்ப்பிரச்சாரங்களில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

“தமிழ்நாட்டில் முட்டாள்கள் அதிகமாகி விட்டனர்” –  ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சு!

திராவிடக் கட்சிகளால் இளைஞர்களின் மூளையில் அழுக்கு படிந்துள்ளது. சினிமா, நாடகங்கள் மூலம் பாஜகவின் கொள்கைகள், சித்தாந்தங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்; இதற்கு பாஜகவில் உள்ள திரையுலக பிரபலங்கள் உதவ வேண்டும். தமிழக அரசியல் திரையுலகத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது; தமிழ்நாட்டில் முட்டாள்கள் அதிகமாகி விட்டனர்” என்றார்.

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற திமுக பரப்புரையில், திமுக ஆட்சிக்கு வந்தால் கல்வி கடனை ரத்து செய்வதாக மு. க. ஸ்டாலின் அறிவித்தார். இது குறித்து ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “கல்விக் கடனை ரத்துச் செய்வாராம் ஸ்டாலின். எது மத்திய அரசின் அதிகாரம் எது மாநில அரசின் அதிகாரத்தில் வருகிறது என்பதே தெரியாத இவர் எம்மாதிரி நிர்வாகத்தை தருவார் என்று கற்பணை செய்து பார்க்கவே முடியவில்லை. தபால் கட்டணம் குறித்தும் அறிவிப்பு வந்தாலும் வரலாம்.ஆண்டவா தமிழகத்தை காப்பாற்று” என்று விமர்சித்துள்ளார்.