Home Uncategorized ராமர் கோயில் பூமி பூஜை விவகாரத்தில் மவுனம் காக்கும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் தலைவர்கள்.. காரணம்?

ராமர் கோயில் பூமி பூஜை விவகாரத்தில் மவுனம் காக்கும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் தலைவர்கள்.. காரணம்?

ஆகஸ்ட் 5ம் தேதியன்று ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொள்ளக் கூடாது என ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறினார். ராமர் கோயில் பூமி பூஜையை தூர்தர்ஷனில் ஒளிபரப்பக் கூடாது என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் எழுதியது. ராமர் கோயில் பூமி பூஜையை வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நடத்தலாம் என சிவ சேனா கருத்து கூறியது.

ராமர் கோயில் பூமி பூஜை விவகாரத்தில் மவுனம் காக்கும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் தலைவர்கள்.. காரணம்?

ராமர் கோயில் மாதிரி

ஆனால் உத்தர பிரதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சிகளான காங்கிரசோ, சமாஜ்வாடியோ அல்லது பகுஜன் சமாஜ் கட்சியோ அந்த விழா குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் மவுனமான உள்ளன. மேலும் ராமர் கோயில் நிகழ்ச்சியில் சமூக விலகல் விதிமுறைகள் உள்பட எந்தவொரு விஷங்கள் குறித்தும் எந்தவித எதிர்மறையான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் மற்றும் அது தொடர்பான சர்ச்சைக்குரிய தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க வேண்டாம் என லோக்கல் தலைவர்களிடம் அந்த கட்சிகளின் மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல். இதன் பின்னணியில் 2022 உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல் உள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

பா.ஜ.க.

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு குறிப்பிடும்படியாக எதுவும் செய்யவில்லை. அதேசமயம் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் ராமர் கோயிலை பெரிய சாதனையாக குறிப்பிட்டு பா.ஜ.க. போட்டியிடும். அதனால் ராமர் கோயில் பூமி பூஜை தொடர்பாக எந்தவொரு சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறி, அதனை பா.ஜ.க. பிரச்சினையாக்க மாற்றி தேர்தலில் அதனை முக்கிய திட்டமாக மாற்றுவதற்கு எந்தவொரு வாய்ப்பையும் கொடுத்து விடக்கூடாது என்பதில் எதிர்க்கட்சிகள் தெளிவாக உள்ளன. அதனால் ராமர் கோயில் பூமி பூஜை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளனர் என தகவல். மேலும், 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் புதிய கல்வி கொள்கை கொண்டு வருவோம் என பா.ஜ.க. வாக்குறுதி கொடுத்தது. அதன்படி, புதிய கல்வி கொள்கையை வகுக்கும் பணியை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தது. தற்போது புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆக இதுவும் பா.ஜக.வுக்கு சாதகமான விஷயம்.

ராமர் கோயில் பூமி பூஜை விவகாரத்தில் மவுனம் காக்கும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் தலைவர்கள்.. காரணம்?
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

இனிமே வீடியோ வெளியிட மாட்டேன்: என் வயசு பொண்ணுகளும் வீடியோ வெளியிட வேணாம்.. ’2k கிட்ஸ்’ சிறுமி

ஒரு வருடத்திற்கு மேலாக பள்ளிகள் இயங்காததால் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருவதால் மாணவ, மாணவிகள் செல்போனிலும் இணையங்களிலும் மட்டுமே மூழ்கி இருக்கின்றனர். பாட நேரம் போக மற்ற நேரங்களிலும்...

“கொரோனா தடுப்பூசிகள் மீதான ஜிஎஸ்டியை தள்ளுபடி செய்க” – பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

கொரோனா தடுப்பூசிகள், மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரியை குறிப்பிட்ட காலத்திற்கு பூஜ்ய சதவிகிதம் என நிர்ணயிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக...

பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருவதால், கொரோனா தடுப்பு பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழக மக்களை இந்த...

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பேருந்து… திருப்பூர் தனியார் அமைப்புகள் புதியமுயற்சி…

திருப்பூர் திருப்பூரில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் விதமாக தனியார் அமைப்புகள் சார்பில் ஆக்சிஜன் பேருந்து சேவை விரைவில் தொடங்க உள்ளது. திருப்பூர்...
- Advertisment -
TopTamilNews