ஆகஸ்ட் 15க்குள் கோவிட்-19க்கான தடுப்பூசி அறிமுகம்… காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கிண்டல்

ஆகஸ்ட் 15க்குள் கோவிட்-19க்கான தடுப்பூசி அறிமுகம்… காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கிண்டல்

பாரத் பயோக்டெக் நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்தான கோவாக்சின் தடுப்பூசியை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்து இருந்தது. இதனை காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.

ஆகஸ்ட் 15க்குள் கோவிட்-19க்கான தடுப்பூசி அறிமுகம்… காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கிண்டல்

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் டிவிட்டரில், ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கோவிட்-19 தடுப்பூசி என்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கோரல் அறிவியலற்ற தவறுகள். மகாபாரதம் 18 நாளில் முடிந்தது, 21 நாட்கள் காத்திருங்கள், கொரோனா போ காரோன் போ என மந்திரங்களை கூறினால் இந்த யுத்தத்தில் வென்று விடலாம், பசு சாணம் புற்று நோயை குணப்படுத்தும், பிள்ளையா தலை அறுவைசிகிச்சையின் அதிசயம் போன்ற மனநிலைகள் எப்போதும் தீர்வுகளை தராது என பதிவு செய்து இருந்தார்.

ஆகஸ்ட் 15க்குள் கோவிட்-19க்கான தடுப்பூசி அறிமுகம்… காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கிண்டல்

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மஹூவா மொய்தரா தனது டிவிட்டரில், பிரதமரின் சுதந்திர தின உரையை மசாலா (கவர்ச்சி) செய்வதற்காக, நவீன விஞ்ஞான வரலாற்றில் முதல் முறையாக ஒரு தடுப்பூசி காலக்கெடுவை சந்திக்க வேண்டும் என கிண்டலாக பதிவு செய்து இருந்தார்.