ஆண்டிபட்டி ஒன்றிய குழு தலைவர் மீது, எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் ஆட்சியரிடம் புகார்

 

ஆண்டிபட்டி ஒன்றிய குழு தலைவர் மீது, எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் ஆட்சியரிடம் புகார்

தேனி

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் ஊழல் முறைகேடு குறித்து விசாரிக்க கோரி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள், தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதில், திமுகவை சேர்ந்த வைரமுத்து, ராஜாராம், ஆசைமணி உள்ளிட்டோரும், காங்கிரசை சேர்ந்த சின்னப்பாண்டி ஆகியோரும் மனு வழங்கினர். மனு அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்கள், ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜி.உசிலம்பட்டி பகுதியில், கடந்த 2018ஆம் ஆண்டு தேனி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் 7 லட்ச ரூபாய் மதிப்பில் பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டு, தற்போது பயன்பாட்டில் இருந்து வருவதாக தெரிவித்தனர்.

ஆண்டிபட்டி ஒன்றிய குழு தலைவர் மீது, எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் ஆட்சியரிடம் புகார்

இந்த நிலையில், வரும் 11ஆம் தேதி ஆண்டிபட்டி ஒன்றியக்குழு தலைவர் லோகிராஜன் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்திற்கான தீர்மான நகலில், அந்த பகுதியில் மீண்டும் பேருந்து நிறுத்தம் கட்டப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கட்டிமுடிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தை மீண்டும் கட்டுவதாக அறிவித்ததை அறிந்த தாங்கள், இதுகுறித்து ஆட்சியரிடம் புகார் அளித்ததாக தெரிவித்தனர்.