திமுகவில் விருப்ப மனு பெற பிப்.28 வரை அவகாசம்!

 

திமுகவில் விருப்ப மனு பெற பிப்.28 வரை அவகாசம்!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தலை எதிர்நோக்கி திமுக – அதிமுக ஆகிய கட்சிகள் அதிரடியாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அதே வேளையில், தேர்தலுக்கான பிற வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் மறைமுகமாக சென்றுக் கொண்டிருக்கிறது.

திமுகவில் விருப்ப மனு பெற பிப்.28 வரை அவகாசம்!

அதே போல அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவித்து விட்டன. அதன் படி, திமுக கடந்த 17ம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டிருக்கிறது. அண்ணா அறிவாலயத்தில் ரூ.1000 செலுத்தி படிவத்தை பெறும் திமுக பிரமுகர்கள், ரூ.25 ஆயிரம் செலுத்தி விருப்ப மனுவை அளிக்க தயாராக இருக்கின்றனர்.

இந்த நிலையில், திமுகவில் விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசம் பிப்.28 வரை நீடிக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்திருக்கிறார். அன்று மாலை 5 மணி வரையில் அண்ணா அறிவாலயத்தில் மனுக்களை பெறலாம் என அவர் குறிப்பிட்டிருக்கிறார். பிப்.24ம் தேதி வரை விருப்ப மனு பெறலாம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது என்பது நினைவு கூரத்தக்கது.