”பலமடங்கு மடக்கி விரிக்கக்கூடிய ஃபோன் – ஒப்போ திட்டம்!

 

”பலமடங்கு மடக்கி விரிக்கக்கூடிய ஃபோன் – ஒப்போ திட்டம்!

இனி.. மடக்கிக்கொள்ளக்கூடிய போன்களுக்கு தான் வருங்காலத்தில் மார்க்கெட்டில் மவுசு இருக்கும்போல ! பல மடங்கு பாய் போல மடக்கி விரித்து பயன்படுத்தக்கூடிய ஃபோனை தயாரிக்க ஒப்போ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

”பலமடங்கு மடக்கி விரிக்கக்கூடிய ஃபோன் – ஒப்போ திட்டம்!

சாம்சங், மோட்டோரோலாவை தொடர்ந்து, பல்வேறு நிறுவனங்களும் மடக்கிவிரிக்க க்கூடிய போன்களை அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வரிசையில் புதிதாக ஒப்போவும் இணைந்திருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி ஒப்போ நிறுவனம், 4 புதிய போன் டிசைன்களுக்கு பேடண்ட் உரிமை கேட்டு சீனாவில் விண்ணப்பித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

”பலமடங்கு மடக்கி விரிக்கக்கூடிய ஃபோன் – ஒப்போ திட்டம்!

அந்த டிசைன் படி, போன் ஆறு மடங்கு உள்புறமாக மடக்கி வைத்து பயன்படுத்தக்கூடிய அம்சம் பொருந்தியது என்றும், அதில் டூயல் கேமரா, யுஎஸ்பி மற்றும் ஸ்பீக்கர் இணைப்பும், இருப்பதாக தெரிகிறது. மேலும் அந்த போனை முழுமையாக மூடி வைத்துக்கொள்ளும் ஆப்ஷனுடன், பாதி மட்டும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக பாதி திரை அமைப்பும் ஏற்படுத்த ஒப்போ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

”பலமடங்கு மடக்கி விரிக்கக்கூடிய ஃபோன் – ஒப்போ திட்டம்!

இந்த டிசைனுக்கு கற்பனை வடிவம் கொடுத்தால், கிட்டத்தட்ட ஆறு மடங்கு மடக்கி, சுருட்டி ஃபோனை பென்டிரைவ் போல ஆக்கிவிடுவார்கள் போல! பேனா போல சுருட்டி சட்டை பையில் வைக்கிற மாதிரி வேணாலும் தயாரிக்கட்டும். ஆனா போன் விலை பை(கை)யை கடிக்காம இருந்தா சரி!

  • எஸ். முத்துக்குமார்