சுருளும் வடிவிலான போன் – ஓப்போ அறிமுகம்!

 

சுருளும் வடிவிலான போன் – ஓப்போ அறிமுகம்!

ஸ்மார்ட்போன் நிறுவனமான ஓப்போ, சுருளும் வகையிலான போனை அறிமுகம் செய்துள்ளது. எதிர்கால ஸ்மார்ட் போன் தொழில்நுட்பங்கள் என்கிற வகையில் இந்த போனை ஓப்போ வடிவமைத்துள்ளது. ஒப்போ எக்ஸ் 2021 என பெயரிடப்பட்டுள்ள இந்த போனின் தொடுதிரை உள்பக்கமாக சுருளும் வகையிலும், தேவைக்கேற்ப விரிவுபடுத்திக் கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்படுகிறது. இதற்காக 3+N+X என்கிற தொழில்நுட்ப உத்தியை ஓப்போ கையாண்டுள்ளது. இந்த புதிய வடிவிலான போனை ஓப்போ நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு உருவாக்கி உள்ளது. குறிப்பாக இந்த போனில் மூன்று வகையான தொழில்நுட்பங்களை பயன்படுத்த உள்ளது. ரோல் மோட்டார் பவர்டிரெய்ன், 2 இன் 1 ப்ளேட், மற்றும் தானாகவே சரி செய்துகொள்ளும் மேற்புற சென்சார் தொழில்நுட்பம் பயன்படுத்த உள்ளது. இதற்கான உறுதியான டிஸ்ப்ளே லேமினேஷன், வலுவான உலோக கட்டமைப்புடன் இந்த போனை உருவாக்கி வருகிறது. 6.7 இன்ச் அளவுள்ள இந்த போனை டிஸ்ப்ளேவை 7.4 இன்ச் வரை விரிவு படுத்திக் கொள்ள முடியும்.

சுருளும் வடிவிலான போன் – ஓப்போ அறிமுகம்!

ஓ.எல்.இ.டி டச் ஸ்கிரீனில் உள்புறமாக சுருளும் வகையில் இருக்கும். சுருண்டு இருக்கும் போனை, விரிவுபடுத்தினால், டிஸ்ப்ளேவில் எந்தவிதமான சுருக்கமும், அடையாளமும் இருக்காது.
ஓப்போ இதுவரை ஸ்மார்ட்போன் தொழில்நுட்பம் தொடர்பாக 122 தொழில்நுட்பங்களுக்கு காப்புரிமை பெற்றுள்ளது. அதில் 12 காப்புரிமைகள் சுருளும் போன் வடிவம் தொடர்பானது என்பது குறிப்பிடத்தக்கது. ஓப்போ நிறுவனத்தின் புதிய தொழில்நுட்ப முயற்சிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில், இந்த போன் வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர ஓப்போ நிறுவனம் வேறு சில பொருட்களையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஒப்போ சைபர் ரியல் ஏ.ஆர் செயலி மற்றும் ஓப்போ ஏ.ஆர் முக் கண்ணாடி ஆகியவற்றையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.