ஓப்போ என்கோ எம்31: ப்ளூடூத் இன்-இயர் ஹெட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வெளியானது

 

ஓப்போ என்கோ எம்31: ப்ளூடூத் இன்-இயர் ஹெட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வெளியானது

டெல்லி: ஓப்போ என்கோ எம்31: ப்ளூடூத் இன்-இயர் ஹெட்போன் இந்தியாவில் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

ஓப்போ என்கோ எம்31 என்ற கழுத்தில் அணியக் கூடிய வயர்லெஸ் ப்ளூடூத் இன்-இயர் மாடல் ஹெட்போன் இந்தியாவில் மார்ச் மாதம் விற்பனைக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இதன் வெளியீட்டு தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது இந்த புதிய மாடல் ஹெட்போன் அமேசான் இந்தியா இணையதளத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் பச்சை என இருவிதமான நிறங்களில் இந்த ஹெட்போன் கிடைக்கிறது. இதன் விலை ரூ.1999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎக்ஸ்5 வாட்டர் ரெசிஸ்டன்ட் அம்சம் இதில் இடம்பெற்றிருப்பதால் நீர்த் துளிகள் மற்றும் வியர்வைத் துளிகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறது. ஒருதடவை முழுமையாக சார்ஜ் செய்தால் 12 மணி நேரம் வரை இந்த சாதனத்தில் பாடல்களை கேட்டு மகிழலாம். அமேசான் பே மூலம் இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.50 கேஷ்பேக் கிடைக்கிறது. மெட்டல் கோட் மற்றும் சிலிக்கான் லிக்விட் ரப்பரில் இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.

ப்ளூடூத் 5 கனெக்டிவிட்டி ஆப்ஷன் இருப்பதால் 990 kbps வேகத்தில் டேட்டாக்களை பகிரும். செயற்கை நுண்ணறிவுடன் கூடிய நாய்ஸ் கேன்சல் அம்சம் இந்த ஹெட்போன் மாடலில் இடம்பெற்றுள்ளது. சார்ஜ் செய்வதற்கு இதில் யு.எஸ்.பி டைப் சி போர்ட் இந்த மாடலில் உள்ளது. அதனால் 10 நிமிடம் சார்ஜ் செய்தால் கூட 3 மணி நேரங்கள் வரை பாடல் கேட்டு மகிழலாம்.