ஆபரேஷன் லோட்டஸ் தோல்வி… ராஜஸ்தான் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் அவசர கூட்டம்!

 

ஆபரேஷன் லோட்டஸ் தோல்வி… ராஜஸ்தான் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் அவசர கூட்டம்!

ராஜஸ்தானில் ஆபரேஷன் லோட்டஸ் தோல்வியடைந்த நிலையில் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் திடீர் ஆலோசனைக் கூட்டம் இன்று ஜெய்ப்பூரில் நடந்து வருவது கவனத்தை ஈர்த்துள்ளது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க பா.ஜ.க முயற்சி செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சச்சின் பைலட் பக்கம் போதுமான எம்.எல்.ஏ-க்கள் வராத நிலையில் ஆட்சிக் கவிழ்ப்பு நாடகம் முடிவுக்கு வந்தது. இருப்பினும் ஏதேனும் செய்து கவிழ்த்துவிட முயற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
நாளை சட்டப்பேரவை கூட உள்ள நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தை பா.ஜ.க கையில் எடுத்துள்ளது. நாளை சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் இந்த வழக்கில் அவசர உத்தரவு பிறப்கிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பா.ஜ.க தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆபரேஷன் லோட்டஸ் தோல்வி… ராஜஸ்தான் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் அவசர கூட்டம்!
இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தில் ராஜஸ்தான் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பா.ஜக சார்பில் ஆஜரான மதன் தில்வார், பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ-க்கள் ஒட்டுமொத்தமாக காங்கிரஸில் இணைந்தது தொடர்பான வழக்கில் உத்தரவை பிறப்பிக்க கேட்டுக் கொண்டார். இதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆஜரான கபில் சிபில் எதிர்ப்பு தெரிவித்தார்.

 

ஆபரேஷன் லோட்டஸ் தோல்வி… ராஜஸ்தான் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் அவசர கூட்டம்!நாளை சட்டப்பேரவை நிகழ்வில் நம்பிக்கைகோரும் தீர்மானம் ஏதும் இல்லை. இதை சரிபார்த்த பின்னர் உச்ச நீதிமன்றம் தேவை எனில் உத்தரவு பிறப்பிக்கலாம்” என்றார்.
அதே நேரத்தில் ராஜஸ்தானில் ஒத்திவைக்கப்பட்ட, இன்று மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனை கூட்டம்

ஆபரேஷன் லோட்டஸ் தோல்வி… ராஜஸ்தான் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் அவசர கூட்டம்!

பிற்பகலிலேயே அவசரமாக கூடியது. இந்த கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் முன்னால் முதல்வர் வசுந்தரா ராஜே உள்ளிட்டோர் பங்கேற்றனர். பா.ஜ.க-வின் அடுத்தக் கட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கூறி வரும் நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.