“பேன்ட் ஜிப்பை திறந்து… சிறுமியின் கையை பிடிப்பது போக்சோவின் கீழ் வராது” – மும்பை நீதிமன்றத்தின் அடுத்த சர்ச்சை தீர்ப்பு!

“பேன்ட் ஜிப்பை திறந்து… சிறுமியின் கையை பிடிப்பது போக்சோவின் கீழ் வராது” – மும்பை நீதிமன்றத்தின் அடுத்த சர்ச்சை தீர்ப்பு!

சமீபத்தில், பாலியல் வழக்கின் மேல் முறையீட்டில் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை வழங்கிய தீர்ப்பு நாட்டையே அதிர்க்குள்ளாக்கியது. இத்தீர்ப்பு குழந்தைகள் நல செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. குழந்தையின் ஆடைக்கு மேல் மார்பகங்களை அழுத்தினால் பாலியல் வன்கொடுமை என்று பொருள்கொள்ள முடியாது என்றும், அதனால் போக்சோ சட்டத்தின் கீழ் வராது எனவும் பெண் நீதிபதி புஷ்பா கனெடிவாலா அதிர்ச்சி தீர்ப்பளித்திருந்தார்.

“பேன்ட் ஜிப்பை திறந்து… சிறுமியின் கையை பிடிப்பது போக்சோவின் கீழ் வராது” – மும்பை நீதிமன்றத்தின் அடுத்த சர்ச்சை தீர்ப்பு!

இந்தத் தீர்ப்பு பெரும் சர்ச்சையாவதற்கு முன்பே கடந்த ஜனவரி 15ஆம் தேதி மற்றுமொரு சர்ச்சை தீர்ப்பை அவர் வழங்கியிருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2018ஆம் ஆண்டு பிப்ரவரி ஐந்து வயது சிறுமியை 50 வயது நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அந்நபர் பேன்ட் ஜிப்பை அவிழ்த்து தனது அந்தரங்க உறுப்பை சிறுமியின் கைகளைப் பிடித்து தொடுமாறு வற்புறுத்தியிருக்கிறார். இந்தச் சமயத்தில் சிறுமியின் தாயார் கண்டு, உடனே அந்நபர் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

“பேன்ட் ஜிப்பை திறந்து… சிறுமியின் கையை பிடிப்பது போக்சோவின் கீழ் வராது” – மும்பை நீதிமன்றத்தின் அடுத்த சர்ச்சை தீர்ப்பு!

இந்த வழக்கு மகாராஷ்டிரா மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவந்தது. குற்றம் நிரூபணமானதை அடுத்து, கடந்த அக்டோபர் மாதம் அந்நபர் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக போக்சோ சட்டத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து குற்றவாளி மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையில் மேல்முறையீடு செய்தார். வழக்கு விசாரணை நடந்துமுடிந்து ஜனவரி 15ஆம் தேதி நீதிபதி புஷ்பா கனேடிவாலா அந்த சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.

“பேன்ட் ஜிப்பை திறந்து… சிறுமியின் கையை பிடிப்பது போக்சோவின் கீழ் வராது” – மும்பை நீதிமன்றத்தின் அடுத்த சர்ச்சை தீர்ப்பு!

“குற்றவாளி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்கான ஆதரங்கள் இல்லை. பேன்ட் ஜிப்பை திறந்ததும், சிறுமியின் கைகளைப் பிடித்ததும் பாலியல் வன்கொடுமை என்று பொருள் கொள்ளப்படாது. அது பாலியல் துன்புறுத்தலுக்கு கீழ் வருமென்பதால் போக்சோ சட்டத்தின் தண்டனை வழங்கப்படாது. ஆனால், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நிச்சயம் தண்டனை வழங்கப்படும். அதிகபட்ச தண்டனையாக ஐபிசி 354A(1) பிரிவின்படி மூன்று வருட சிறையும் அபராதமும் விதிக்கலாம். 448 பிரிவின் கீழ் ஒரு வருட சிறையும் அபராதமும் விதிக்கலாம்.

“பேன்ட் ஜிப்பை திறந்து… சிறுமியின் கையை பிடிப்பது போக்சோவின் கீழ் வராது” – மும்பை நீதிமன்றத்தின் அடுத்த சர்ச்சை தீர்ப்பு!

குற்றவாளி ஏற்கனவே 5 மாதம் சிறை தண்டனையை அனுபவித்திருப்பதால், தற்போதைய தண்டனை காலத்தைக் கணக்கிட்டு அவரை விடுவிக்க வேண்டும்” என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார். ஆடைக்கு மேல் மார்பகங்களை அழுத்தினால் போக்சோவின் கீழ் வராது என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. விளக்கமளிக்க நோட்டீஸும் அனுப்பியிருக்கிறது. அதேபோல இந்தத் தீர்ப்பும் நிறுத்திவைக்கப்படுமா என்று கேள்வி எழுந்திருக்கிறது.