கிருஷ்ணா நதியில் தண்ணீர் திறப்பு – வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி

கிருஷ்ணா நதியில் தண்ணீர் திறப்பு – வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கிருஷ்ணா நதியில் தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

கிருஷ்ணா நதியில் தண்ணீர் திறப்பு – வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி
கிருஷ்ணா நதியில் தண்ணீர் திறப்பு – வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி

இதனால் தற்போது ஏரியின் நீர்மட்டம் 16.31 அடியாகவும், நீர்மட்டம் 1,780 மில்லியன் கனஅடியாகவும் உயர்ந்துள்ளது. கிருஷ்ணா நதியில் இருந்து வினாடிக்கு 480 கனஅடி நீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்கு நாள்தோறும் 59 கனஅடி நீர் எடுக்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ணா நதியில் தண்ணீர் திறப்பு – வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி

கோயம்பேட்டில் இருந்து மூன்றாம் கட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டிற்கு சென்று கொண்டிருப்பதால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சிப்காட்டிற்கு தண்ணீர் கொடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது. அவ்வப்போது பெய்த மழையால் ஏரி சற்று நிரம்பினாலும் முழுக்க, முழுக்க கிருஷ்ணா நதி நீரால் மட்டுமே தற்போது ஏரி முழுவதும் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது. மேலும், நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

கிருஷ்ணா நதியில் தண்ணீர் திறப்பு – வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி