1 முதல் 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு : இன்று முக்கிய ஆலோசனை!!

 

1 முதல் 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு : இன்று முக்கிய ஆலோசனை!!

1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று மாலை ஆலோசனை நடைபெறவுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

1 முதல் 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு : இன்று முக்கிய ஆலோசனை!!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதன் மூலம் கொரோனாவால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளன. இருப்பினும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பல்வேறு மாவட்டங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 முதல் 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு : இன்று முக்கிய ஆலோசனை!!

இந்நிலையில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று ஆலோசனை நடைபெறுகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.சென்னை கோடம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளில் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறப்பது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுடன் இன்று மாலை நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பின் அறிவிக்கப்படும். வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பள்ளிகள் திறக்கப்படும். நீட் தேர்வை ரத்து செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் தீவிர முயற்சி எடுத்து வருகிறார். அனைவரும் ஒன்று சேர்ந்து நீட்தேர்வு எதிர்க்க வேண்டும் என்பதை நிலைப்பாடு” என்றார். 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு அதன்மூலம் கிடைக்கும் அனுபவம் குறித்து தெரிந்துகொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பது குறித்து இன்று ஆலோசிக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.