ஆழியாறு பாசனப் பகுதிகளுக்கு நாளை முதல் நீா் திறப்பு!

 

ஆழியாறு பாசனப் பகுதிகளுக்கு நாளை முதல் நீா் திறப்பு!

ஆழியாறு பாசனப் பகுதிகளுக்கு நாளை முதல் தண்ணீா் திறந்து விட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஆழியாறு பாசனப் பகுதிகளுக்கு நாளை முதல் நீா் திறப்பு!

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாசன பகுதிகளுக்கு ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட ஆழியாறு படுக்கை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கை வந்தன. அவர்களின் கோரிக்கையை ஏற்று கோவை-ஆழியாறு அணையிலிருந்து ஆழியாறு படுகை “அ” மண்டலத்தின் பொள்ளாச்சி கால்வாய் “அ” மண்டலம், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் “ஆ”, சேத்துமடை கால்வாய் “அ”, ஆழியாறு ஊட்டுக்கால்வாய் “அ” மண்டல பாசனப் பகுதிகளுக்கு நாளை (7.10.2020) முதல் இடைவெளி விட்டு 80 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆழியாறு பாசனப் பகுதிகளுக்கு நாளை முதல் நீா் திறப்பு!

இதனால் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டங்களில் உள்ள 22 ஆயிரத்து 116 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்” என்று குறிப்பிட்டுள்ளார்.