ரூ.66.50 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி மைய கட்டிடங்கள் திறப்பு

 

ரூ.66.50 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி மைய கட்டிடங்கள் திறப்பு

ஈரோடு

ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் 66 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 7 இடங்களில் கட்டிமுடிக்கப்பட்ட அங்கன்வாடி மையங்களை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அதிமுக எம்எல்ஏ-க்கள் கே.வி.ராமலிங்கம், தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து காரப்பாறை, கொங்கனாம் பள்ளி, நேதாஜி நகர், மோகன் குமாரமங்கலம் வீதி, காந்திஜி ரோடு, நேதாஜி வீதி பகுதியில் கட்டிப்பட்டிருந்த 7 அங்கன்வாடி மையங்களையும் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தனர்.

ரூ.66.50 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி மைய கட்டிடங்கள் திறப்பு

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், உதவி ஆணையாளர் விஜயா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சாந்தி மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.