“நீலகிரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், 102 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு” – ஆட்சியர் தகவல்

 

“நீலகிரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், 102 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு” – ஆட்சியர் தகவல்

நீலகிரி

நீலகிரியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் 102 சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 நேரமும் கண்காணிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட 3 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய, வாக்குப்பதிவு இயந்திரங்கள், நேற்று வாக்கு எண்ணிக்கை மையமான பிங்கர் போஸ்ட் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைத்து, சீல் வைக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில், பொது பார்வையாளர்கள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் முன்னிலையில், அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக தனித்தனியாக 3 அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

“நீலகிரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், 102 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு” – ஆட்சியர் தகவல்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றிலும், 102 கேமராக்கள் பொருத்தப்பட்டு 3 ஷிப்டுகளாக சுழற்சி முறையில் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், முதல் அடுக்கில் மத்திய ரிசர்வ் போலீசாரும், இரண்டாவது மற்றும் மூன்றாவது அடுக்குகளில் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தை கண்காணிக்க ஏதுவாக தனி கூடாரம் அமைக்கப்பட்டு, டிவி வசதி செய்து கொடுத்து உள்ளதாகவும், இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.