செப்.9 முதல் நீலகிரி மாவட்டத்தில் பூங்காக்கள் திறப்பு!

 

செப்.9 முதல் நீலகிரி மாவட்டத்தில் பூங்காக்கள் திறப்பு!

நீலகிரி மாவட்டத்தில் தாவரவியல், சிம்ஸ், ரோஸ், காட்டேரி பூங்காக்கள் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் திறக்கப்படும் மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

வெளிமாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு அரசு பேருந்துகளில் வரும் உள்ளூர் மக்கள் ஆதார் அட்டையை காண்பித்து பயணிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா தெரிவித்துள்ளார். மேலும் சுற்றுலாப் பயணிகள் இ- பாஸ் அப்ளை செய்யும் போது சுற்றுலாவிற்காக என்று பதிவிட்டு இ பாஸ் பெறலாம் என்றும், சுற்றுலா தொழில் நலிவடைந்திருப்பதை கணக்கில் கொண்டு முதற்கட்டமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்கா,சிம்ஸ் பூங்கா,ரோஸ் பூங்கா,காட்டேரிப் பூங்காகள் புதன் கிழமை முதல் திறக்கப்படும் என்றும் மாவட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா கூறியுள்ளார்.

செப்.9 முதல் நீலகிரி மாவட்டத்தில் பூங்காக்கள் திறப்பு!

மற்ற சுற்றுலா தலங்கள் திறப்பது குறித்து தமிழக அரசிடம் இருந்து அறிவிப்புகள் கிடைத்ததும் அறிவிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா விளக்கமளித்துள்ளார்.