ஊத்துக்கோட்டையில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் – பொதுமக்கள் அவதி

ஊத்துக்கோட்டையில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் – பொதுமக்கள் அவதி

திருவள்ளூர்

ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதியில் குடியிப்புகளை மழைநீர் சூழ்ந்து கொண்டதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை கனமழை பெய்தது. இதனால், பேரூராட்சி அலுவலகம் அருகேயுள்ள மாதாகோவில் தெருவில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துகொண்டது.

ஊத்துக்கோட்டையில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் – பொதுமக்கள் அவதி

சாலையில் சுமார் 3 அடி உயரம் வரை தேங்கியுள்ள மழைநீரால் அந்த பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வெள்ள நீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதியில் மின்சார கம்பங்கள் மிகவும் அருகாமையில் இருப்பதால், மின்விபத்து ஏற்படும் அபாயமும் நிலவி வருகிறது.

ஊத்துக்கோட்டையில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் – பொதுமக்கள் அவதி

இதுகுறித்து பேசிய அப்பகுதி மக்கள், உரிய வடிகால் வசதி இல்லாததால் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்குவது தொடர் கதையாகி வருவதாக தெரிவித்தனர். இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திடமும் பல முறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ள அவர்கள், தேங்கியுள்ள மழைநீரால் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அதிகாரிகள் விரைந்து மழைநீரை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.