`முதுகு தண்டுவட நோயால் குழந்தை பாதிப்பு; கண்கலங்கிய கேரள பெற்றோர்!’- கரம் நீட்டிய உம்மன்சாண்டி, விஜயபாஸ்கர்

`முதுகு தண்டுவட நோயால் குழந்தை பாதிப்பு; கண்கலங்கிய கேரள பெற்றோர்!’- கரம் நீட்டிய உம்மன்சாண்டி, விஜயபாஸ்கர்

தமிழகத்தில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் தவித்த கேரள தம்பதிக்கு அம்மாநில முன்னாள் முதல்வரும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும் உதவி செய்துள்ளனர். தற்போது குழந்தை வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

`முதுகு தண்டுவட நோயால் குழந்தை பாதிப்பு; கண்கலங்கிய கேரள பெற்றோர்!’- கரம் நீட்டிய உம்மன்சாண்டி, விஜயபாஸ்கர்

கேரள மாநிலம் கும்பநாடு பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மனைவி டீனா. இந்த தம்பதிக்கு, அடூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்துள்ளது. 7 நாட்களே ஆன நிலையில் குழந்தை அடிக்கடி அழுது கொண்டிருந்திருக்கிறது. இதையடுத்து, குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், முதுகு தண்டுவட நோய் இருப்பதை கண்டுபிடித்தனர். இந்த நோயை கேரளாவில் சரி செய்ய முடியாது என கூறிய மருத்துவர்கள், வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அதற்கு சிகிச்சை அளிக்கப்படுவதால், அங்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரைத்துள்ளனர்.

மாநிலம் விட்டு மாநிலம் வரும் போது கண்டிப்பாக இபாஸ் வேண்டும். இதையடுத்து, குழந்தையை தமிழகத்திற்கு கொண்டு வர இபாஸ் பெற பெற்றோர் விண்ணப்பித்தனர். ஆனால் இபாஸ் கிடைக்கவில்லை. இதையடுத்து, கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியை பெற்றோர் அணுகியுள்ளார். அவர் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் பேசி, முறையாக இபாஸ் கிடைக்க உதவியுள்ளார்.

`முதுகு தண்டுவட நோயால் குழந்தை பாதிப்பு; கண்கலங்கிய கேரள பெற்றோர்!’- கரம் நீட்டிய உம்மன்சாண்டி, விஜயபாஸ்கர்

இதையடுத்து, அடூரில் இருந்து இரவு 10 மணிக்கு குழந்தையுடன் ஆம்புலன்ஸ் புறப்பட்டது. வாகனத்தை சூரத் மேத்யூ என்பவர் ஓட்டி வந்தார். ஆம்புலன்ஸ் வாகனம் வருவதை அடுத்து, பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வழி ஏற்படுத்தப்பட்டு, பிற வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால், வெறும் 10 மணி நேரத்தில், அதாவது காலை 8 மணிக்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வந்தடைந்தது. இதையடுத்து, மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

`முதுகு தண்டுவட நோயால் குழந்தை பாதிப்பு; கண்கலங்கிய கேரள பெற்றோர்!’- கரம் நீட்டிய உம்மன்சாண்டி, விஜயபாஸ்கர்

குழந்தைக்கு சிகிச்சை அளிக்க தமிழகத்துக்கு வர முடியாமல் தவித்த தம்பதிக்கு கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சூரத் மேத்யூ ஆகியோருக்கு குழந்தையின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி கூறினர்.