’சச்சின் சாதனையை முறியடிக்க இவரால் மட்டுமே முடியும்’ இர்பான் பதான் சொல்வது யாரை?

’சச்சின் சாதனையை முறியடிக்க இவரால் மட்டுமே முடியும்’ இர்பான் பதான் சொல்வது யாரை?

கிரிக்கெட்டின் கடவுள் என சச்சின் டெண்டுல்கரை அவரின் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அந்தளவுக்கு நீண்ட காலம் இந்திய கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைப் பதித்தவர் சச்சின்.

’சச்சின் சாதனையை முறியடிக்க இவரால் மட்டுமே முடியும்’ இர்பான் பதான் சொல்வது யாரை?
Sachin Tendulkar

200 டெஸ்ட் போட்டிகள் ஆடியிருக்கிறார். ஒரு கிரிக்கெட் வீரர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது சாதாரண விஷயமல்ல. டெஸ்ட் போட்டிகளில் சச்சின் ம்ஒத்தம் 15,921 ரன்களைக் குவித்திருக்கிறார். இதில் 51 சதங்கள் அடங்கும். அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் 248 ரன்கள் எடுத்துள்ளார்.

463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 18,426 ரன்களைக் குவித்துள்ளார் சச்சின். இதில் 49 சதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 195 ரன்கள் எடுத்துள்ளார்.

1989 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட்டில் தனக்கான முத்திரையைப் பதித்தார் சச்சின் டெண்டுல்கர். அவரின் முறியடிக்கப்பட முடியாத சாதனையாகப் பலரும் சொல்வது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சேர்த்து மொத்தம் 100 சதங்களை அடித்ததையே. ஆனால், முடியும் என்று இர்பான் பதான் ஒருவரைச் சொல்கிறார்.

’சச்சின் சாதனையை முறியடிக்க இவரால் மட்டுமே முடியும்’ இர்பான் பதான் சொல்வது யாரை?
Irfan Pathan

சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் அளித்த பேட்டியில், ’மிகக் குறுகிய காலத்தில் அதிக சதங்கள் அடித்த வீர்ர் என்றால் அது விராட் கோலிதான். சச்சினின் சாதனையை ஒருவரால் முறியடிக்க முடியும் என்றால் அது விராட் கோலியால்தான்’ என்று தெரிவித்திருக்கிறார்.  

’சச்சின் சாதனையை முறியடிக்க இவரால் மட்டுமே முடியும்’ இர்பான் பதான் சொல்வது யாரை?

Ricky Ponting

100 சதங்களோடு முதல் இடத்தில் சச்சின் இருக்கிறார். அடுத்த இடத்தில் 71 சதங்களோடு ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் உள்ளார். இவர் 2012 ஆம் ஆண்டே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட்டார்.

’சச்சின் சாதனையை முறியடிக்க இவரால் மட்டுமே முடியும்’ இர்பான் பதான் சொல்வது யாரை?
Virat Kohli

மூன்றாம் இடத்தில் இருப்பவர் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. இவர் 70 சதங்கள் அடித்துள்ளார். இன்னும் குறைந்தது ஐந்தாண்டுகள் கோலி ஆடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் சச்சின் சாதனையை முறிடிப்பார் என்றே விமர்சகர்களும் தெரிவிக்கின்றனர்.

விராட் கோலி 86 டெஸ்ட் போட்டிகளில் 27 சதங்களும் 248 ஒருநாள் போட்டிகளில் 43 சதங்களையும் விளாசியுள்ளார்.