கூண்டோடு வெளியேறும் மநீம நிர்வாகிகள்… விளக்கும் சந்தோஷ் பாபு

 

கூண்டோடு வெளியேறும் மநீம நிர்வாகிகள்… விளக்கும் சந்தோஷ் பாபு

தமிழக மக்களுக்கு நேர்மையான ஊழலற்ற நிர்வாகத்தைத் தரும் அருகதை தலைவர் கமல்ஹாசனுக்கு மட்டுமே இருக்கிறது என்று சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார்.

கூண்டோடு வெளியேறும் மநீம நிர்வாகிகள்… விளக்கும் சந்தோஷ் பாபு

மக்கள் நீதி மய்யம் தலைமை நிலைய பொதுச் செயலாளரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சந்தோஷ் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கட்சியை விட்டு வெளியேறி விட்டதாக தவறான தகவல் பரவி வருகிறது.

கூண்டோடு வெளியேறும் மநீம நிர்வாகிகள்… விளக்கும் சந்தோஷ் பாபு

தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களைத் தலைவரிடம் கொடுத்தனர். தேர்தல் கால செயல்பாடுகளை காய்தல் உவத்தல் இன்றி ஆய்வு செய்து கட்சியை மறுகட்டமைப்பு செய்வதற்கு ஏதுவாக இருக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட கடிதங்கள் தலைவரின் பரிசீலனையில் இருக்கிறது.

கட்சியின் துணைத்தலைவராக இருந்த டாக்டர் ஆர். மகேந்திரன் மட்டுமே கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சி கட்டமைப்பில் செய்யப்படும் மாற்றங்கள், புதிய பொறுப்பாளர்கள் குறித்த விபரங்கள் விரைவில் முறையாக அறிவிக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நேர்மையான உலகத்தரம் வாய்ந்த நிர்வாகத்தை தமிழகத்தில் உருவாக்க வேண்டுமெனும் ஒரே நோக்கத்தில் ஐஏஎஸ் பதவியை தூக்கி ஏறிந்துவிட்டு அரசியலுக்கு வந்தவன் நான். தமிழக மக்களுக்கு நேர்மையான ஊழலற்ற நிர்வாகத்தைத் தரும் அருகதை தலைவர் திரு.கமல்ஹாசனுக்கு மட்டுமே இருக்கிறது. நான் அவரோடு நிற்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.