மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும் – கனிமொழி

 

மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும் – கனிமொழி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை கொள்ளை வழக்கு தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்திருக்கிறது. இந்த புதிய விசாரணையின் பின்னணி குறித்துதான் பரபரப்பு எழுந்திருக்கிறது.

மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும் – கனிமொழி

கொடநாடு வழக்கில் நிபந்தனை ஜாமீனில் உதகையில் தங்கியிருக்கும் வழக்கின் முதல் குற்றவாளியான சயானிடம் கடந்த 13ம் தேதி கோத்தகிரி போலீசார் இந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த வேண்டி இருப்பதாக மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி இந்த வழக்கில் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளனர்.

போலீசார் சயானிடம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை செய்துள்ளனர் . விசாரணையில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் சொல்லித்தான் இந்த கொலை கொள்ளையில் ஈடுபட்டோம் என்று தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அவர் மேலும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கனகராஜிடம் தொடர்பில் இருந்ததாகவும் அவர்களின் கட்டளைப்படி தான் கனகராஜ் செயல்பட்டதாகவும் தனது வாக்குமூலத்தில் சொல்லியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும் – கனிமொழி

மறு விசாரணை குறித்து 20 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதன் பின்னர்தான் வழக்கு அடுத்தகட்டத்திற்கு எப்படி செல்கிறது என்பது தெரியவரும் என்கிற சூழலில் கொடநாடு வழக்கு விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து ஆளுநரை நேரில் சந்தித்து முறையிட்டும் இருக்கிறார்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற கனிமொழி எம்.பியிடம், எடப்பாடி பழனிச்சாமியின் பதற்றம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ’’மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.