இன்று கோவிஷீல்டு தடுப்பூசிகள் மட்டும் செலுத்தப்படும் : சென்னை மாநகராட்சி

இன்று கோவிஷீல்டு தடுப்பூசிகள் மட்டும் செலுத்தப்படும் : சென்னை மாநகராட்சி

கொரோனா பாதிப்புக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் போதிய தடுப்பூசிகள் இல்லாததால் மக்கள் ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு செல்கின்றனர். இந்த சூழலில் தமிழகத்திற்கு அதிக அளவு தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.இதன் படி நேற்று முன்தினம் 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்த நிலையில் நேற்று 5 லட்சத்து 42 ஆயிரத்து 280 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வரவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இன்று கோவிஷீல்டு தடுப்பூசிகள் மட்டும் செலுத்தப்படும் : சென்னை மாநகராட்சி

இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று கோவிஷீல்டு தடுப்பூசிகள் மட்டும் செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கோவாக்சின் கையிருப்பு இல்லாததால் இன்று கோவிஷீல்டு மட்டுமே செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கோவிஷீல்டு தடுப்பூசிகள் மட்டும் செலுத்தப்படும் : சென்னை மாநகராட்சி

இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் கொரோனா 3-வது அலை தாக்கக் கூடும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுததுள்ள நிலையில் பொதுமக்கள் தடுப்பூசியை செலுத்தி பாதுகாப்பாக இருக்க தேவையான அனைத்து நடவடிக்கையையும் அரசு எடுக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது