இந்த 4 நாட்கள் மட்டும் சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி!

 

இந்த 4 நாட்கள் மட்டும் சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி!

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் காரணமாக சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

இந்த 4 நாட்கள் மட்டும் சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலை 4 திசைகளிலும், மலைகளால் சூழப்பட்ட மிகவும் பிரபலமான இடம் சதுரகிரி. இங்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும். சுமார் 4,500 அடி உயரத்தில் உள்ள இந்தக் கோயிலிலுக்கு ஏராளமான பக்தர்கள் சிரமம் பாராமல் வந்து செல்வது வழக்கம்.

இந்த 4 நாட்கள் மட்டும் சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி!

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரி அளிக்கப்பட்டுள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆனி மாத அமாவாசையை ஒட்டி விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 7ம் தேதி முதல்10ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நான்கு நாட்களிலும் காலை 7 மணி முதல் ஒரு மணி வரை மட்டுமே மலை ஏறலாம் என்று அறிவித்துள்ள மாவட்ட நிர்வாகம், ஓடைகளில் நீராடவும், தங்கவும் அனுமதி அளித்துள்ளது.