கொரோனாவால் 87 பேர் மட்டுமே உயிரிழப்பு : முக்கிய தகவல் இதோ!

 

கொரோனாவால் 87 பேர் மட்டுமே உயிரிழப்பு : முக்கிய தகவல் இதோ!

இந்தியாவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 87 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் நாளொன்றுக்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 1 லட்சமாக இருந்த வந்த நிலையில் தற்போது, 10 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்கிறது. கடந்த மாதம் 16ம் தேதி கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியதும் இதற்கு ஒரு முக்கிய காரணம். இதுவரை 75.05 லட்சம் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. விரைவில் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாவால் 87 பேர் மட்டுமே உயிரிழப்பு : முக்கிய தகவல் இதோ!

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 9,309 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாகவும் 15,858 பேர் குணமடைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஒரே நாளில் 87 பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாகவும் மொத்த உயிரிழப்புகள் 1,55,447 ஆக அதிகரித்துள்ளதாகவும் 1,35,926 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 1,08,80,603 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.