திரையரங்குகளில் மீண்டும் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி

 

திரையரங்குகளில் மீண்டும் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி

தியேட்டர்களில் 100% அனுமதி அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு வாபஸ் பெற்றது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் முழுவதும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. இதை தொடர்ந்து கொரோனா பரவல் குறைய தொடங்கியதால் கடந்த அக்டோபர் மாதம்முதல் 50% இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. இருப்பினும் புதுப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதே சமயம் கொரோனா அச்சத்தால் மக்களும் தியேட்டருக்கு வராததால் தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. பொங்கல் பண்டிகை வரவிருப்பதால் 100% ரசிகர்கள் அனுமதியுடன் தியேட்டர்கள் செயல்பட தமிழக அரசு அனுமதிக்குமாறு நடிகர்கள் விஜய், சிம்பு கோரிக்கை விடுத்தினர். இதனையடுத்து தியேட்டர்களில் 100% அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காரணம் தியேட்டர்களில் மக்கள் அதிகம் கூடினால் மீண்டும் கொரோனா தலைதூக்கும் என எச்சரிக்கை விடுத்தனர், மத்திய அரசும் தமிழக அரசின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்தது.

திரையரங்குகளில் மீண்டும் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி

இந்நிலையில் 50% இருக்கைகள் மட்டுமே திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 100 சதவீத அனுமதிக்கான உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. மத்திய அரசின் அறிவுரையை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவின் படி கூடுதல் காட்சிகளை திரையிட அனுமதிக்கலாம் என்றும், முகக் கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.