“50% பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி” – சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 

“50% பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி” – சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொரோனா இரண்டாவது அலை பரவலைக் கருத்தில் கொண்டு நீதிமன்றத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்குடன், நேரடியாக வழக்கை விசாரிக்கும் நடைமுறை நிறுத்தப்பட்டது. காணொலி வாயிலாக மட்டுமே வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக் கிளையில் மட்டுமே நீதிபதிகள் நீதிமன்றங்களுக்கு வந்து விசாரித்து வருகின்றனர். அரசு வழக்கறிஞர்கள் சிலர் நேரில் ஆஜராகி வருகின்றனர்.

Madras High Court - Wikipedia

இச்சூழலில் சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக் கிளையில், ஜூன் 14ஆம் தேதி முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, அனைத்துப் பிரிவுகளும் 50 சதவீதப் பணியாளர்களுடன் மட்டுமே செயல்பட வேண்டும் என, உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ப.தனபால் உத்தரவு பிறப்பித்துள்ளார். நீதிமன்ற ஊழியர்கள் இரு பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் இரண்டு நாட்கள் பணி என, சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் என்றும், மற்றவர்கள் பணிக்கு வரத் தயாராக வீட்டில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.