நம் நாட்டில் ஊழல் அதிகரித்துள்ளதாக 47 சதவீத மக்கள் தகவல்… ஆய்வு முடிவு

நம் நாட்டில் ஊழல் அதிகரித்துள்ளதாக 47 சதவீத மக்கள் தகவல்… ஆய்வு முடிவு

நம் நாட்டில் கடந்த 12 மாதங்களில் ஊழல் அதிகரித்துள்ளதாக கருத்து கணிப்பில் ஒன்றில் 47 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம் ஆசிய பிராந்திய நாடுகளில் ஊழல் தொடர்பாக 17 நாடுகளில் 20 ஆயிரம் பேரிடன் ஒரு ஆய்வு ஒன்ற மேற்கொண்டது. அதன் முடிவுகளை தற்போது அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த சர்வேயில் பங்கேற்ற இந்தியர்களில் 47 சதவீதம் பேர் மட்டுமே கடந்த 12 மாதங்களில் ஊழல் அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.

நம் நாட்டில் ஊழல் அதிகரித்துள்ளதாக 47 சதவீத மக்கள் தகவல்… ஆய்வு முடிவு
லஞ்சம்

அதேசமயம் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு சிறப்பாக செய்வதாக 63 சதவீதம் நம்பிக்கையுடன் தெரிவித்தனர். காவல் துறையுடன் தொடர்பு கொண்டவர்களில் 42 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். அடையாள ஆவணங்கள் போன்ற அலுவலகபூர்வ ஆவணத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுப்பது பரவலாக இருந்து என்று 41 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நம் நாட்டில் ஊழல் அதிகரித்துள்ளதாக 47 சதவீத மக்கள் தகவல்… ஆய்வு முடிவு
லஞ்சம்

ஆசிய பிராந்தியத்தில் இந்தியாதான் அதிகபட்சமாக 39 சதவீத லஞ்ச விகிதத்தை கொண்டுள்ளது. கம்போடியா 37 சதவீத லஞ்ச விகித்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேசமயம் மாலதீவு மற்றும் ஜப்பானில் லஞ்ச விகிதம் மிகவும் குறைவாக 2 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.