பீகாரில் கட்சிகளில் புறக்கணிப்படும் பெண்கள்.. தேர்தலில் 144 பெண்கள் மட்டுமே போட்டியிட வாய்ப்பு

பீகாரில் கட்சிகளில் புறக்கணிப்படும் பெண்கள்.. தேர்தலில் 144 பெண்கள் மட்டுமே போட்டியிட வாய்ப்பு

பீகாரில் 28ம் தேதி நடைபெற உள்ள முதல் கட்ட தேர்தலில் 144 பெண்கள் மட்டுமே போட்டியிட அரசியல் கட்சிகள் சீட் வழங்கியுள்ளன. அதேசமயம் 922 ஆண்கள் தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கி உள்ளனர்.

பீகாரில் 243 தொகுதிகளை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இம்மாதம் 28ம் தேதி தொடங்கி மொத்தம் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. வரும் 28ம் தேதியன்று முதல் கட்டமாக மொத்தம் 71 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த மொத்தம் 1,066 பேர் போட்டியிடுகின்றனர்.

பீகாரில் கட்சிகளில் புறக்கணிப்படும் பெண்கள்.. தேர்தலில் 144 பெண்கள் மட்டுமே போட்டியிட வாய்ப்பு
பெண் வாக்காளர்கள்

முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 922 பேர் ஆண்கள். அதேசமயம் அரசியல் கட்சிகள் 144 பெண்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட சீட் வழங்கியுள்ளன. இவ்வளவுக்கும் பீகாரில் ஆண்களுக்கு நிகராக பெண் வாக்காளர்கள் உள்ளனர். பீகாரின் தேர்தல் சுயவிவரத்தின்படி, பீகாரில் 3.8 கோடிக்கும் அதிகமாக ஆண் வாக்காளர்கள் உள்ளனர். அதேவேளையில் 3.4 கோடிக்கும் பெண் வாக்காளர்கள் உள்ளனர்.

பீகாரில் கட்சிகளில் புறக்கணிப்படும் பெண்கள்.. தேர்தலில் 144 பெண்கள் மட்டுமே போட்டியிட வாய்ப்பு
பெண் வாக்காளர்கள்

ஆண்களுக்கு இணையாக பெண் வாக்காளர்கள் இருந்தாலும், அரசியல் கட்சிகள் ஆண்களுக்குதான் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கியுள்ளன. முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களில் 13.5 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள். கடந்த 2015 சட்டப்பேரவை தேர்தலில் அரசியல் கட்சிகள் மொத்தம் 273 பெண்களுக்கு மட்டுமே போட்டியிட சீட் வழங்கின. இதில் 28 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.