‘திருமணத்தில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை’ – அறநிலையத்துறை கெடுபிடி!

 

‘திருமணத்தில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை’ – அறநிலையத்துறை கெடுபிடி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 6000 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர அதிரடி நடவடிக்கையில் இறங்கிய தமிழக அரசு, புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவு பிறப்பித்தது. புதிய கட்டுப்பாடுகள் கடந்த 10ம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டன.

‘திருமணத்தில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை’ – அறநிலையத்துறை கெடுபிடி!

அதன் படி திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 100 பேர், துக்க நிகழ்வுகளில் அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அதே போல மால்கள், ஷோ ரூம்கள், கோவில்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் 50% மக்களுக்கே அனுமதி அளிக்கப்படுகிறது.விதிகளை மீறும் இடங்களில் அதிரடியாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

‘திருமணத்தில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை’ – அறநிலையத்துறை கெடுபிடி!

இந்த நிலையில், கோயில்களில் நடக்கும் திருமண நிகழ்ச்சிக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து அறநிலையத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘கோவிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் 10 பேருக்கு மேல் அனுமதி இல்லை. கோவிலுக்கு சொந்தமான மண்டபங்களில் நடைபெறும் திருமணத்தில் 50 பேருக்கு மேல் அனுமதி கிடையாது. ஒதுக்கீடு செய்யப்படும் நேரத்தில் மட்டுமே திருமண நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். திருமண விழாக்களில் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்’ என அதில் குறிப்பிட்டுள்ளது.