மத்திய அரசு பணிகளுக்கு வரும் செப்டம்பரில் ஆன்லைன் தேர்வு!

 

மத்திய அரசு பணிகளுக்கு வரும் செப்டம்பரில் ஆன்லைன் தேர்வு!

மத்திய அரசு பணிகளுக்கு வரும் செப்டம்பர் மாதம் ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களுக்கு, குறிப்பாக அரசாங்க வேலையில் சேர வேண்டுமென முயற்சிப்பவர்களுக்கு இந்த அறிவிப்பு மிகப்பெரிய வரப்பிரசாதம். மத்திய அரசு பணிகளுக்காக விண்ணபிப்போருக்கு சிஇடி எனப்படும் செட் தேர்வை ஆன்லைனில் நடத்தி, ஆட்களைத் தேர்வு செய்யும் நடைமுறை விரைவில் கொண்டுவரப்படும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தேசிய ஆள்தேர்வு முகமை அறிவித்திருந்தது.

மத்திய அரசு பணிகளுக்கு வரும் செப்டம்பரில் ஆன்லைன் தேர்வு!

அதன்படி, குரூப் பி மற்றும் சி உள்ளிட்ட பிரிவுகளில் வேலைக்கு விண்ணப்பிவர்களுக்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆன்லைன் தேர்வு நடைபெறும் எனவும், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் தேசிய ஆள்தேர்வு முகமை உருவாக்கப்பட்டுவிட்டதாகவும் அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். பணியாளர்கள் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி), ரயில்வே வாரியங்கள் (ஆர்.ஆர்.பி) மற்றும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐ.பி.பி.எஸ்) உள்ளிட்ட தொழில்நுட்பம் அல்லாத பணிகளுக்கான பொதுத் தகுதித் தேர்வுகள் இனி தேசிய ஆட் தேர்வு முகமையின் கீழ் கொண்டுவரப்படும், தொலைதூர கிராமங்களில் வசிக்கும் தேர்வர்களுக்கும், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஆன்லைன் தேர்வு நிச்சயம் உதவியாக இருக்கும் என்றும் அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.