ஆன்லைனில் மதுபானம் விற்பனை என பணம் மோசடி ! வங்கி ஊழியரின் பணத்தையே ஆட்டை போட்ட சைபர் குற்றவாளிகள் !!

 

ஆன்லைனில் மதுபானம் விற்பனை என பணம் மோசடி ! வங்கி ஊழியரின் பணத்தையே ஆட்டை போட்ட சைபர் குற்றவாளிகள் !!

மும்பையில் ஆன்லைனில் மதுபானம் விற்பதாக கூறி வங்கி ஊழியர் ஒருவரின் கிரெடிட் கார்டிலிருந்து ரூ.82,500 பணத்தைத் திருடியுள்ளனர். இதை அடுத்து வங்கி ஊழியர் கொடுத்த புகாரில் பணம் திருடிய நபர்களின் ஐ.பி. முகவரிகளை வைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

ஆன்லைனில் பொருட்கள் வாங்கும்போது எந்த நபரிடமும் வங்கி விவரங்கள் தரவேண்டாம் என போலீசார் பலமுறை அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் மும்பை சண்டிவிலியில் உள்ள ரஹேஜா விஹாரில் வசிக்கும் வங்கி ஊழியர் ஆன்லைனில் ரூ.4,500க்கு மதுபானம் வாங்குவதற்காக தனது கிரெடிட் கார்டு விவரங்களை பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஆன்லைனில் மதுபானம் விற்பனை என பணம் மோசடி ! வங்கி ஊழியரின் பணத்தையே ஆட்டை போட்ட சைபர் குற்றவாளிகள் !!
ஊரடங்கிற்கு மத்தியில் மகாராஷ்டிரா அரசு அருகிலுள்ள கடைகளில் இருந்து மதுபானங்களை வீட்டுக்கு வழங்க அனுமதித்ததை அடுத்து மதுவாங்குவதற்காக அவர் காத்திருந்தார். இந்நிலையில் மதுபானங்களை வீட்டிற்கே வந்து டெலிவரி செய்வதாக ஒரு விளம்பரம் பேஸ்புக்கில் வந்ததை பார்த்துள்ளார். உடனே மே 18 அன்று ஆன்லைனில் தனது கிரெடிட் கார்டு விவரங்களை பகிர்ந்து மதுபானம் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் மதுபானமும் வரவில்லை. கிரெடிட் கார்டில் 82,500 பணமும் போய்விட்டது. இதுகுறித்து ஜூன் 1 ம் தேதி போலீசில் புகார் அளிக்க வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர் வங்கியின் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொண்ட பின்னர் 39,500 ரூபாய் மட்டும் அவருக்கு திரும்ப கிடைத்துள்ளது.