மாணவர்களின் ஆன்லைன் புகைப்பட கண்காட்சி- சென்னை போட்டோ பியனாலே ஏற்பாடு

மாணவர்களின் ஆன்லைன் புகைப்பட கண்காட்சி- சென்னை போட்டோ பியனாலே ஏற்பாடு

ஊரடங்கு காலத்தில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக நாளந்தா வே மற்றும் அகஸ்தியா பவுண்டேஷன் தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடத்தப்பட்ட போட்டோ பயிற்சி தொடர்பான ஆன்லைன் கண்காட்சி நாளை நடைபெற உள்ளது.

மாணவர்களின் ஆன்லைன் புகைப்பட கண்காட்சி- சென்னை போட்டோ பியனாலே ஏற்பாடு

வீட்டில் இருந்த நாட்கள், வீட்டில் இருந்து கற்றுக் கொண்ட விஷயங்கள் என, வீடு தொடர்பான புகைப்படங்களை மாணவர்கள் காட்சிப்படுத்த உள்ளனர். இந்த ஆன்லைன் புகைப்பட கண்காட்சியினை சென்னைபோட்டோ பியனாலே நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

மாணவர்களின் ஆன்லைன் புகைப்பட கண்காட்சி- சென்னை போட்டோ பியனாலே ஏற்பாடு

மாணவர்களுக்கு 7 வாரங்கள் நடத்தப்பட்ட ஆன்லைன் பயிற்சியின் அடிப்படையில், நாளை காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. கண்காட்சியின் சிறப்பு விருந்தினராக சென்னையின் பிரபலமான புகைப்பட நிபுணர் குருநாதன் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு புகைப்படக் கலை குறித்து பேச உள்ளார்.

மாணவர்களின் ஆன்லைன் புகைப்பட கண்காட்சி- சென்னை போட்டோ பியனாலே ஏற்பாடு

வீடு என்றால் அதன் அர்த்தம் என்ன என்பதை பல கோணங்களில் அணுகும் வகையில், மாணவர்களின் பங்களிப்பு இடம்பெற உள்ளது. 10 வயது முதல் 19 வயதுகுட்பட்ட குழந்தைகள் இந்த கண்காட்சியில் புகைப்படங்களை காட்சி படுத்த உள்ளனர். தெற்காசிய அளவில் மிகச் சிறப்பான போட்டோகிராபி பயிற்சியை அளித்து வரும் சென்னை போட்டோ பியனாலே நிறுவனம் மாணவர்களுக்கு போட்டோகிராபி குறித்த பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.