நீட் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்!

 

நீட் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்!

நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை ஆன்லைனில் இலவசமாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன் படி, Amphisoft Technologies (E-box) என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, தமிழக மாணவர்கள் தேர்வை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் நேற்று நீட் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சியை தொடக்கி வைத்தார் முதல்வர். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஒன்றியத்துக்கு ஒரு மையம் வீதம் 412 மையங்களில் பயிற்சி வகுப்புகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் கொரோனா பாதிப்பால் இன்னும் பள்ளிகள் திறக்கப்படாததால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவும் வகையில் இலவச நீட் தேர்வு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை 7,420 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்!

அந்த ஆன்லைன் வகுப்பில் ஒரு பாடத்திற்கு 1 மணி நேரம் வீதம் 4 மணி நேரம் வகுப்புகள் நடைபெற இருப்பதாகவும் 80 பயிற்சி தேர்வுகள், 80 வளரரித் தேர்வுகள், 5 அலகுத் தேர்வுகள், 12 திருப்புதல் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பயனுள்ள இந்த இலவச வகுப்பை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில், அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் சண்முகம், பள்ளிக் கல்வித் துறை ஆணையர் மற்றும் இயக்குனர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.