• March
    28
    Saturday

Main Area

Main



ஆன்லைனில் விளையாட்டு... லட்சக்கணக்கில் பணம்!  திடீர் பணக்கார வாழ்க்கை!

கால் செண்டர்
கால் செண்டர்

ஆசைகள் ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு விதமா வருது. ஆனா அதை அனுபவிக்க நினைக்கிறதுக்கான வழிகளைத் தான் பெரும்பாலும் நிறையபேர் முறைகேடான வழிகளில் செல்ல நினைத்து தேர்ந்தெடுக்கிறார்கள். பெரிய சொகுசு பங்களா, போர்டிக்கோவில் நான்கைந்து விலையுயர்ந்த கார் என்று ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட ஒரு கும்பல், நூதனமான மோசடி திட்டத்தைத் தீட்டியது.

arrest

அந்த திட்டத்தின் படி, சென்னையில் ஃபீனிக்ஸ் கால் செண்டர் என்று புதிதாய் கால் செண்டர் துவங்கி, வேலைக்கு நான்கைந்து பெண்களையும் வைத்துக் கொண்டார்கள். அதன் பிறகு, வங்கிக் கடன் வாங்கித் தருவதாக 500க்கும் மேற்பட்டவர்களின் வங்கி விபரங்களை வாங்கிக் கொண்டு, வங்கிகளில் இருந்த பணத்தை கொள்ளையடித்திருக்கிறார்கள் 12 பேர் கொண்ட கும்பல்.
போலீசாரிடம் சிக்கிய இந்த கும்பல், இப்படி சிக்கிக் கொண்டால், கொள்ளையடித்த பணத்தை ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளில் பந்தயம் கட்டி இழந்ததாகச் சொல்லி பத்திரப்படுத்திக் கொள்ளலாம் என்கிற யோசனையில் இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.