ஆன்லைன் சூதாட்ட விவகாரம் : விராட் கோலி , தமன்னாவுக்கு நோட்டீஸ்!

ஆன்லைன் சூதாட்ட விவகாரம் : விராட் கோலி , தமன்னாவுக்கு நோட்டீஸ்!

விராட் கோலி, நடிகை தமன்னாவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, நாடு முழுவதும் ரம்மி, பாஸியன், லியோவேகாஸ், ஸ்பார்டன்போக்கர், போக்கர் டங்கல், பாக்கெட் 52, ஜீனியஸ் கேசினோ போன்ற ‘ஆன்லைன்’ விளையாட்டுகள் காளான்கள் போல முளைத்துக் கொண்டு இருக்கின்றன. இவை அனைத்தும் வீட்டில் இருந்தபடியே எளிதாகப் பணம் சம்பாதிக்கலாம் என இளைஞர்களைத் தூண்டுகின்றன. இதனால் நிதி நெருக்கடி மற்றும் உயிர் பலிகள் கூட ஏற்படுகின்றன.

ஆன்லைன் சூதாட்ட விவகாரம் : விராட் கோலி , தமன்னாவுக்கு நோட்டீஸ்!

இதையடுத்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர் முகமதுரஸ்பி மனுதாக்கல் செய்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட விவகாரம் : விராட் கோலி , தமன்னாவுக்கு நோட்டீஸ்!

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக கருத்து தெரிவித்தனர்.

ஆன்லைன் சூதாட்ட விவகாரம் : விராட் கோலி , தமன்னாவுக்கு நோட்டீஸ்!

அத்துடன் ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் விராட் கோலி, தமன்னாவுக்கு உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கங்குலி, நடிகர் பிரகாஷ்ராஜ், சுதீப், ராணாவுக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக் கோரும் வழக்கில் நவம்பர் 19ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்ததற்காக தமன்னா, விராட் கோலியை கைது செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூர்யபிரகாஷ் ஏற்கனவே வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.