ஆன்லைனில் அள்ளுகிறது பட்டாசு வியாபாரம் – களை கட்டுகிறது தீபாவளியும், சிவகாசியும்..

 

ஆன்லைனில் அள்ளுகிறது பட்டாசு வியாபாரம் – களை கட்டுகிறது தீபாவளியும், சிவகாசியும்..

ஆன்லைனில் அள்ளுகிறது பட்டாசு வியாபாரம் – களை கட்டுகிறது தீபாவளியும், சிவகாசியும்..


உலகிலேயே சீனாவிற்கு அடுத்தபடியாக பட்டாசு தயாரிப்பில் சிவகாசிக்கு 2-வது இடம். சிவகாசியில் 1928-ல் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தயாரிப்பு தொழில் தொடங்கப்பட்டு 1940-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த தொழில் சூடு பிடித்தது.
இந்தியாவிற்குத் தேவையான 90 சதவிகித பட்டாசுகள் இங்குதான் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு, சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சிவாகாசிப் பட்டாசுகளை வாங்கி விற்பது, சரக்கு போக்கு வரத்து என இதன் மூலம் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பிருக்கிறது. சிவகாசியில் சிறியதும், பெரியதுமாக 1,500க்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிற்சாலைகள் உள்ளன. ஆண்டு தோறும் சுமார் 1,800 கோடி ரூபாய்க்கு இங்கு பட்டாசு விற்பனை நடக்கும்.
சமீபகாலமாக சீனப் பட்டாசுகளின் வருகை, நீதி மன்ற தீர்ப்புகள் என 50 சதவிகித பட்டாசுகளைக்கூட விற்பனை செய்யமுடியாமல் முடங்கிப் போனது சிவகாசி நகரம்.தற்போது சில கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மீண்டும் பட்டாசு விற்பனையில் சிவகாசி நகரம் களை கட்டியுள்ளது.

ஆன்லைனில் அள்ளுகிறது பட்டாசு வியாபாரம் – களை கட்டுகிறது தீபாவளியும், சிவகாசியும்..

கொரோனா பாதிப்பால் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக முடங்கிக் கிடந்த மக்கள் இந்த தீபாவளியை கோலாகலமாக கொண்டாடும் வகையில் மிக உற்சாகமடைந்துள்ளர். வரும் 14- ம் தேதி தீபாவளி கொண்டாடப் படுவதையொட்டி விருதுநகர், சிவகாசி, சாத்தூர், திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் நகரப் பகுதிகளிலும் பைபாஸ் சாலைகளையொட்டியும் 1,500-க் கும் மேற்பட்ட பட்டாசு மொத்த மற்றும் சில்லறை விற்பனைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

ஆன்லைனில் அள்ளுகிறது பட்டாசு வியாபாரம் – களை கட்டுகிறது தீபாவளியும், சிவகாசியும்..


சிவகாசியில் பல நிறுவனங்கள் 40 முதல் 75 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெளி மாநிலம் மற்றும் வெளியூர்களுக்கு சரக்கு லாரிகள் மூலம் பட்டாசு அனுப்பும் பணிகள் மும்முரமடைந்துள்ளன.
இதுகுறித்து பட்டாசு விற்பனையாளர்கள் கூறும்போது, ‘‘தீபாவளிக்காக புதுப்புது ரகங்களில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. சிவகாசியில் பட்டாசு விற்பனை கடந்த 4 நாட்களாக அதிகரித்துள்ளது. இங்கு மொத்த மற்றும் சில்லறை விற்பனையைத் தவிர கடந்த 8 ஆண்டுகளாக “ஆன் லைன்” மூலமாகவும் பட்டாசு விற்பனை நடந்து வருகிறது. பிரபல பட்டாசு நிறுவனங்கள் தவிர நூற்றுக்கணக்கான சிறு நிறுவனங்களும் ஆன் லைனில் பட்டாசுகளை விற்பனை செய்து வருகின்றன. இதனால் கடந்த 2 ஆண்டுகளைவிட சிவகாசியில் இந்த ஆண்டு ஆன் லைன் மூலம் பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது.ஆன் லைன் மூலம் பட்டாசு வாங்கும் பழக்கம் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது என்றனர்..