அடுத்த கல்வியாண்டிற்கான பாடநூல்களை வழங்கி ஆன்லைன் வகுப்பு நடத்த நடவடிக்கை- அமைச்சர் செங்கோட்டையன்

அடுத்த கல்வியாண்டிற்கான பாடநூல்களை வழங்கி ஆன்லைன் வகுப்பு நடத்த நடவடிக்கை- அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு மூடப்பட்டிருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அரசு அறிவுறுத்தியது. அதன் படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதனை தடை செய்யக்கோரி சரண்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்த நிலையில், அதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

அடுத்த கல்வியாண்டிற்கான பாடநூல்களை வழங்கி ஆன்லைன் வகுப்பு நடத்த நடவடிக்கை- அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா வைரஸால் வரும் 2 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்குதல் வரும் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகளும் அதற்கு பிறகு தான் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதனால் மாணவர்கள் நலனுக்காக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அடுத்த கல்வியாண்டிற்கான பாடநூல்களை மாணவா்களுக்கு வழங்கி, ஆன்லைன் மூலம் பயிற்சி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.