பேராசிரியர்கள் அனைத்து வேலை நாட்களிலும் கட்டாயம் கல்லூரிக்கு வர உத்தரவு!

பேராசிரியர்கள் அனைத்து வேலை நாட்களிலும் கட்டாயம் கல்லூரிக்கு வர உத்தரவு!

அனைத்து கல்லூரிகளிலும் ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன என்று உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பேராசிரியர்கள் அனைத்து வேலை நாட்களிலும் கட்டாயம் கல்லூரிக்கு வர உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள், கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் எடுப்பது என தமிழக அரசு திட்டங்களை வகுத்து வருகிறது. அதேசமயம் நடப்பு ஆண்டுக்கான பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை உள்ளிட்டவையும் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் வருகின்ற 9ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பேராசிரியர்கள் அனைத்து வேலை நாட்களிலும் கட்டாயம் கல்லூரிக்கு வர உத்தரவு!

இந்நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்பு தொடங்க உள்ள நிலையில் பேராசிரியர்கள் கல்லூரிக்கு வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பணியாளர்களும், அனைத்து வேலை நாட்களிலும் கட்டாயம் கல்லூரிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.கல்லூரி பல்கலைக் கழகத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் ஆணை பிறப்பித்துள்ளார். தொழில்நுட்ப கல்வி இயக்ககம், கல்லூரிக் கல்வி இயக்ககம், பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.