ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கலாம்.. விளக்கம் அளித்த அமைச்சர் செங்கோட்டையன்

 

ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கலாம்.. விளக்கம் அளித்த அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதே போல, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடந்து முடிந்து விட்டன. அதன் படி, நேற்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கலாம்.. விளக்கம் அளித்த அமைச்சர் செங்கோட்டையன்

இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தனியார் பள்ளிகளில் ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொது முடக்கத்தின் போது கட்டணம் வசூலித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், ஆன்லைனில் வகுப்புகள் எடுக்க தடை இல்லை என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். அதாவது ஆசிரியர்களை பள்ளிகளுக்கு வரவழைத்து ஆன்லைன் வகுப்புகள் எடுக்கத் தான் தடை என கூறியதாகவும், மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தலாம் என்றும் கூறியுள்ளார்.