5 ஆம் வகுப்பு வரை ஆன்லைனில் பாடம் நடத்தத் தடை.. எங்கு தெரியுமா?

 

5 ஆம் வகுப்பு வரை ஆன்லைனில் பாடம் நடத்தத் தடை.. எங்கு தெரியுமா?

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு மூடப்பட்டிருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அரசு அறிவுறுத்தியது. அதன் படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் டிஜிட்டல் வசதி இல்லாத மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் தவித்து வரும் சூழலும் நிலவி வருகிறது.

5 ஆம் வகுப்பு வரை ஆன்லைனில் பாடம் நடத்தத் தடை.. எங்கு தெரியுமா?

இந்நிலையில் கர்நாடகாவில் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார். மாணவர்களின் வயது மற்றும் மனநலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் மூலம் நடத்தப்படும் வகுப்புகள் குறித்து விவாதிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..

ஆன்லைனில் பாடம் எடுப்பதை எதிர்த்து பல பெற்றோர்கள் புகார் அளித்ததால், மனநல மருத்துவர்களிடம் ஆலோசித்த பிறகே மழலை பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பிற வகுப்புகளுக்கு எந்த நேரத்தில் பாடங்கள் நடத்துவது உள்ளிட்ட முழு விவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.