திருநள்ளாறு கோயிலில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது!

 

திருநள்ளாறு கோயிலில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது!

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் வாசலில் பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.

திருநள்ளாறு கோயிலில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது!

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் உள்ள சனி பகவானுக்கு தனி சன்னதியுடன் கூடிய புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 27 ஆம் தேதி சனி பெயர்ச்சி நிகழ்வு வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ந்தார் . அப்போது உற்சவ கோலத்தில் காட்சியளித்த சனிபகவான் தங்க காக்கை வாகனத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரோனா பரவலை கருத்தில்கொண்டு திருநள்ளாறு கோவிலுக்குள் ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

திருநள்ளாறு கோயிலில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது!

இந்நிலையில் திருநள்ளாறு சனிபகவான் கோயில் வாசலில் பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. ஏழைகள் , எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் சிரமத்தை போக்க கோயில் வாசலிலேயே பக்தர்களுக்கு முன்பதிவு தொடங்கியுள்ளது. சனிப்பெயர்ச்சி முடிந்து முதல் சனிக்கிழமை என்பதால் தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.