ஆன்லைன் பதிவு செய்தால் மட்டுமே அனுமதி… பழனியில் சொற்ப எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம்!

ஆன்லைன் பதிவு செய்தால் மட்டுமே அனுமதி… பழனியில் சொற்ப எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம்!

பழனி முருகனை தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கொரோனா காரணமாக கடந்த 5 மாதங்களாக தமிழகம் முழுவதும் வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் ஏழாம் கட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

ஆன்லைன் பதிவு செய்தால் மட்டுமே அனுமதி… பழனியில் சொற்ப எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம்!

இதையடுத்து தமிழக அரசு வழிபாட்டு தலங்களை திறக்கவும், மக்கள் வழிபடவும் அனுமதி அளித்தது. இதையடுத்து இன்று தமிழகம் முழுவதும் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆன்லைன் பதிவு செய்தால் மட்டுமே அனுமதி… பழனியில் சொற்ப எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம்!

இந்நிலையில் பழனி திருக்கோவிலில் ஆன்லைனில் முன்பதிவு செய்து அதற்கான அத்தாட்சி உடன் வந்தால் மட்டுமே கோயிலுக்குள் அனுமதி வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் பக்தர்கள் படிக்கட்டு வழியாக மட்டுமே மலை ஏற முடியும் என்றும் ரோப் கார், மின் இழுவை ரயில் போன்ற சேவைகளுக்கு அனுமதி இல்லை என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது ஆன்லைனில் பக்தர்கள் குறைவான எண்ணிக்கையில் முன்பதிவு செய்ததால் சொற்ப எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.