‘நியாயவிலைக் கடைகளில் வெங்காயம் விற்பனை’ – அமைச்சர் காமராஜ்

‘நியாயவிலைக் கடைகளில் வெங்காயம் விற்பனை’ – அமைச்சர் காமராஜ்

தேவைப்பட்டால் நியாயவிலைக் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

‘நியாயவிலைக் கடைகளில் வெங்காயம் விற்பனை’ – அமைச்சர் காமராஜ்

திருவாரூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த அமைச்சர் காமராஜ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘வெங்காய விலை உயர்வு தற்காலிகமானது தான்.
வெங்காயம் அறுவடை பகுதியில் பெய்து வரும் மழையால் தற்போது விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து விலை உயர்வு தொடரும் பட்சத்தில் ரேஷனில் வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அவர் உறுதியளித்துள்ளார்.

‘நியாயவிலைக் கடைகளில் வெங்காயம் விற்பனை’ – அமைச்சர் காமராஜ்

தமிழகத்திற்கு மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தான் வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் தற்போது மழை காரணாமாக வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த ஒரு வாரத்தில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் வெங்காயத்தின் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் கிலோ வெங்காயம் ரூ. 45க்கு விற்பனை செய்யப்படுகிறது .