உச்சத்தை தொட்ட வெங்காய விலை : கோயம்பேட்டில் ஒரு கிலோ ரூ.110க்கு விற்பனை!

உச்சத்தை  தொட்ட வெங்காய விலை : கோயம்பேட்டில் ஒரு கிலோ ரூ.110க்கு விற்பனை!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ. 100 முதல் 110 வரை விற்பனையாகிறது.

ரூ. 80க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெங்காயத்தின் விலை மேலும் 20 முதல் 30 வரை உயர்ந்துள்ளது. தொடர் மழையால் ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து வரத்து குறைந்ததால் தமிழகத்தில் வெங்காயம் விலை அதிகரித்துள்ளது.

உச்சத்தை  தொட்ட வெங்காய விலை : கோயம்பேட்டில் ஒரு கிலோ ரூ.110க்கு விற்பனை!

தமிழகத்திற்கு வெளிமாநிலங்களிருந்து தான் வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் தற்போது மழை காரணாமாக வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த ஒரு வாரத்தில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

உச்சத்தை  தொட்ட வெங்காய விலை : கோயம்பேட்டில் ஒரு கிலோ ரூ.110க்கு விற்பனை!

நவம்பர் மாதத்தில் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர், கர்நாடக மாநிலம் கதக், ஹூப்ளி ஆகிய இடங்களில் இருந்து வெங்காயம் விற்பனைக்காக வரும். ஆனால் மழை காரணமாக சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐப்பசி மாதத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதால் வெங்காய தேவை அதிகரித்துள்ளது. இதனால் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.