வெங்காய விலை ஜனவரியில்தான் குறையுமாம்

 

வெங்காய விலை ஜனவரியில்தான் குறையுமாம்

இந்தியா முழுவதும் ஆண்டுக்கு சுமார் 150 லட்சம் டன் வெங்காயம் தேவைப்படுகிறது. இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில்தான் நமது தேவைக்கான வெங்காயம் பெருமளவு உற்பத்தியாகிறது.

வெங்காய விலை ஜனவரியில்தான் குறையுமாம்

வெங்காயம் இங்கு அறுவடை செய்யப்படும் காலத்தில் தொடர் மழை பெய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனால் வெங்காயத்தின் விலை உயர்ந்து விடுகிறது. தற்போது பெரிய வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சின்ன வெங்காயம் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெங்காய விலை ஜனவரியில்தான் குறையுமாம்


வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவது மக்கள் மனதில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. வெங்காயத்தின் விலை கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்தே படிப்படியாக உயர்ந்து வருகிறது. வெங்காய விலையை கட்டுக்குள் வைத்திருக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் வெங்காயம் விலை குறித்து கோயம்பேடு வியாபாரிகள் தெரிவிக்கும் பொழுது வெங்காய வரத்து ஜனவரி மாதம் வரை இதே நிலையில் நீடிக்கும் எனத் தெரிகிறது. எனவே விலையும் ஜனவரி மாதம் வரை குறைய வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளனர்.