• April
    04
    Saturday

Main Area

Main



வெங்காய ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதித்த துருக்கி, இலங்கை....... பிப்ரவரி வரை வெங்காயம் விலை உச்சத்ததில்தான் இருக்குமாம்.......

வெங்காயம்
வெங்காயம்

நம் நாட்டில் எதிர்பாராத கனமழை காரணமாக வெங்காய சாகுபடி பாதித்தது. உற்பத்தி குறைந்ததால் சப்ளை கடுமையாக பாதித்தது. இதனையடுத்து வெங்காயத்தின் விலை மளமளவென ஏற்றம் கண்டது. ஒரு கட்டத்தில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.200க்கு விற்பனையானது. விலை உயர்வை கட்டுப்படுத்தவும், சப்ளையை அதிகரிக்கவும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 40 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. மத்திய அரசு சார்பாக எம்.எம்.டி.சி. நிறுவனம் வெங்காயம் இறக்குமதி செய்ய ஆர்டர் கொடுத்தது.

வெங்காயம்

வெளிநாடுகளிலிருந்து வெங்காயம் உள்நாட்டுக்கு வரத் தொடங்கி விட்டது. அண்மையில் மும்பையில் 790 டன் இறக்குமதி வெங்காயம் வந்து இறங்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது வெங்காய சப்ளையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் விலை சிறிது குறைந்துள்ளது. தற்போது சில்லரை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100க்கு விற்பனையாகிறது. இருப்பினும், வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகமாகவே இருக்க வாய்ப்புள்ளது.

வெங்காயம்

ஏனென்றால் துருக்கி, இலங்கை போன்ற நாடுகள் வெங்காய கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. மேலும் வெங்காயம் குறைந்த அளவிலேயே இறக்குமதியாகியள்ளது. எனவே பிப்ரவரி மத்தி வரை வெங்காயத்தின் விலை குறையாது என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் உள்நாட்டில் சாகுபடி செய்த வெங்காயத்தின் வரத்து அதிகரித்தால் மட்டுமே வெங்காயத்தின் விலை குறையும் என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

2018 TopTamilNews. All rights reserved.