முதல் முறையாக நஷ்டம் அடைந்த ஓ.என்.ஜி.சி….. அதுவும் ரூ.3,098 கோடியாம்

முதல் முறையாக நஷ்டம் அடைந்த ஓ.என்.ஜி.சி….. அதுவும் ரூ.3,098 கோடியாம்

பொதுத்துறை நிறுவனமான ஆயில் அண்டு நேச்சுரல் கியாஸ் கார்ப்பரேஷன் (ஓ.என்.ஜி.சி.) நிறுவனம் தனது வரலாற்றில் முதல் முறையாக கடந்த மார்ச் காலாண்டில் நஷ்டத்தை சந்தித்துள்ளது. 2020 மார்ச் காலாண்டில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு ரூ.3,098 கோடி நிகர இழப்பு ஏற்பட்டுள்ளது. 2019 மார்ச் காலாண்டில் அந்நிறுவனம் ரூ.4,239.50 கோடி லாபம் ஈட்டியிருந்தது.

முதல் முறையாக நஷ்டம் அடைந்த ஓ.என்.ஜி.சி….. அதுவும் ரூ.3,098 கோடியாம்

எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளின் சரிவால் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது அதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் 2020 மார்ச் காலாண்டில் அந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் 19.8 சதவீதம் குறைந்து ரூ.21,456.2 கோடியாக சரிவடைந்துள்ளது. கடந்த மார்ச் காலாண்டில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டு இருந்தாலும் ஒட்டு மொத்தத்தில் கடந்த நிதியாண்டில் அந்நிறுவனம் லாபம் ஈட்டியுள்ளது.

முதல் முறையாக நஷ்டம் அடைந்த ஓ.என்.ஜி.சி….. அதுவும் ரூ.3,098 கோடியாம்

2019-20 முழு நிதியாண்டில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தனிப்பட்ட முறையில் லாபமாக ரூ.13,444.54 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் (2018-19) காட்டிலும் 49.8 சதவீதம் குறைவாகும். சென்ற நிதியாண்டில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் வருவாய் 12.3 சதவீதம் குறைந்து ரூ.96,213.61 கோடியாக குறைந்துள்ளது.