நஷ்டத்திலிருந்து மீண்ட ஓ.என்.ஜி.சி…. 3 மாதத்தில் ரூ.496 கோடி லாபம்…

நஷ்டத்திலிருந்து மீண்ட ஓ.என்.ஜி.சி…. 3 மாதத்தில் ரூ.496 கோடி லாபம்…

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 2020 ஜூன் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.496 கோடி ஈட்டியுள்ளது.

பொதுத்துறை நிறுவனமான ஆயில் அண்டு நேச்சுரல் கியாஸ் கார்ப்பரேஷன் (ஓ.என்.ஜி.சி.) நிறுவனம் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 2020 ஜூன் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.496 கோடி ஈட்டியுள்ளது. 2020 மார்ச் காலாண்டில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு ரூ.3,098 கோடி நிகர இழப்பு ஏற்பட்டது.

நஷ்டத்திலிருந்து மீண்ட ஓ.என்.ஜி.சி…. 3 மாதத்தில் ரூ.496 கோடி லாபம்…
ஓ.என்.ஜி.சி.

2020 ஜூன் காலாண்டில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் தனிப்பட்ட செயல்பாட்டு வாயிலான வருவாய் 39.4 சதவீதம் குறைந்து ரூ.13,011.3 கோடியாக வீழ்ச்சி கண்டுள்ளது. எரிவாயு விற்பனை குறைந்தது மற்றும் சர்வதே சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலையில்லாமல் இருந்தது போன்ற காரணங்களால் வருவாய் குறைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நஷ்டத்திலிருந்து மீண்ட ஓ.என்.ஜி.சி…. 3 மாதத்தில் ரூ.496 கோடி லாபம்…
ஓ.என்.ஜி.சி.

கடந்த காலாண்டில் ஓ.என்.ஜி.சி.யின் இதர வருவாய் ரூ.436.82 கோடியாக குறைந்துள்ளது. 2020 மார்ச் காலாண்டில் அந்நிறுவனத்தின் இதர வருவாய் ரூ.1,325.64 கோடியாக உயர்ந்து இருந்தது. ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு உறுப்பினர்கள் கடன் வாயிலாக ரூ.35 ஆயிரம் கோடி திரட்ட ஒப்புதல் அளித்துள்ளனர்.