அரியலூர், கடலூரில் 15 இடங்களில் கிணறு தோண்ட ஓஎன்ஜிசி திட்டம்

 

அரியலூர், கடலூரில் 15 இடங்களில் கிணறு தோண்ட ஓஎன்ஜிசி திட்டம்

தமிழகத்தின் அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் 15 பெட்ரோலிய ஆய்வுகிணறு தோண்ட ஓஎன்ஜிசி நிறுவனம் திட்டமிட்டுள்ளது என நாடாளுமன்றத்தில் மத்திய பெட்ரோலிய அமைச்சர் தெரிவித்துள்ளார்

அரியலூர், கடலூரில் 15 இடங்களில் கிணறு தோண்ட ஓஎன்ஜிசி திட்டம்

மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், தமிழகத்தின் எந்தந்த இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறுகளை தோண்டுகிறது? இதற்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளதா? புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஹைட்ரோ கார்பன் ஆய்வு திட்டங்களை மத்திய அரசு கைவிடுகிறதா? இதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து மத்திய அரசுடன் மாநில அரசு ஆய்வு நடத்தியதா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி, ”தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் 10 ஆய்வு கிணறுகளும், கடலூர் மாவட்டத்தில் 5 ஆய்வு கிணறுகளும் தோண்ட ஓஎன்ஜிசி நிறுவனம் திட்டமிட்டுள்ளது, இவை தொடர்பாக சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு ஆவணங்களை தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் / மாநில சுற்றுசூழல் ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. 1966ம் ஆண்டு ONGC நிறுவனம் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் தனது ஆய்வுக்கான முயற்சிகளை தொடங்கியது. 2008ம் ஆண்டு ஓரு கிணறும் 2012ம் ஆண்டு மற்றொரு கிணறும் தோண்டபட்டது. அவற்றை தோண்டுவதற்கான அனுமதியும் முன்கூட்டியே பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 3வது சுற்றாக சிறு எண்ணெய் கிணறுகளை கண்டறிய அனுமதி கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் 2 பெட்ரோலிய ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.